மேக்கேதாட்டு: தமிழக அரசு பதில் மனு தாக்கல்

மேக்கேதாட்டு விவகாரத்தில் கர்நாடக அரசு, மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுக்களுக்கு தமிழக அரசு சார்பில் பதில் மனு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
மேக்கேதாட்டு: தமிழக அரசு பதில் மனு தாக்கல்


மேக்கேதாட்டு விவகாரத்தில் கர்நாடக அரசு, மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுக்களுக்கு தமிழக அரசு சார்பில் பதில் மனு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவது குறித்து விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அளித்த அனுமதிக்குத் தடை கோரி தமிழக அரசு கடந்த ஆண்டு இறுதியில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. மேலும், மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடுத்தது.
கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் மனுக்களுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கர்நாடக அரசு சார்பில் கடந்த ஜனவரி 4-ஆம் தேதியும், மத்திய அரசு சார்பில் ஜனவரி 12-ஆம் தேதியும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள விரிவான திட்ட அறிக்கைக்கு பதில் அளிக்க தமிழகம், மத்திய அரசு சார்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், நான்கு வாரங்கள் அவகாசம் அளித்தனர்.
தமிழக அரசு பதில் மனு: இந்நிலையில், தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நண்பகலில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மேக்கேதாட்டு அணை திட்டம் தொடர்பாக கர்நாடக அரசு 2018, ஆகஸ்ட் 20-இல் தாக்கல் செய்த சாத்தியக் கூறு அறிக்கையில்,மேக்கேதாட்டு அணையின் கொள்ளளவு 67.16 அடி என்றும், அதில் 27.64 அடி நீர் ஜூன் முதல் அக்டோபர் வரை பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் பாசனம் தொடர்பான கூறுகள் இல்லை. இருப்பினும், நீரைப் பயன்படுத்தும் காலத்தை கருத்தில் கொண்டால், நீர் பாசனத்துக்காக பயன்படுத்தப்படும் என்பது தெளிவாகிறது. எனவே, இந்த அம்சத்தை திட்ட ஆய்வுக் குழு கருத்தில் கொள்ளவில்லை. இந்த அணை திட்டம் தமிழக மக்களின் உரிமைகளைப் பாதிக்கும். எனவே, கர்நாடக அரசு சமர்ப்பித்த சாத்தியக் கூறு அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது.
மேலும், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கர்நாடக அரசின் பதிலையும் ஏற்றுக் கொள்ள முடியாது. மேக்கேதாட்டு அணைத் திட்டம் காவிரி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிரானது. மேக்கேதாட்டு அணையால், மாதந்தோறும்தமிழகத்துக்குதிறக்கப்பட வேண்டிய நீரின் அளவையும், நீர்ப் பிடிப்பு பகுதிகளின் இயற்கையான நீரோட்டத்தையும் பாதிக்கும். புதியஅணையால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பயன்பெறும் எனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com