வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு: எதிர்க்கட்சியினருக்கு தமிழிசை கேள்வி

வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து சர்ச்சையை எழுப்பிய எதிர்க்கட்சியினர், அதனை ஏன் ? நிரூபிக்கவில்லை என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு: எதிர்க்கட்சியினருக்கு தமிழிசை கேள்வி


வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து சர்ச்சையை எழுப்பிய எதிர்க்கட்சியினர், அதனை ஏன் ? நிரூபிக்கவில்லை என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அவர் திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: 
மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. வீடுவீடாக சென்று மோடி அரசின் சாதனைகளை பதிவு செய்ய உள்ளோம். காவிரி பிரச்னையும் தீர்ப்போம், கோதாவரியும் தமிழகம் வரும். தமிழகத்தில் இனி தண்ணீர் பிரச்னை வராது. பாஜக, ஆட்சியில் தான் மதுரையில் எய்ம்ஸ், திருச்சி உள்பட தமிழகத்தின் பல இடங்களில் ரூ. 3,300 கோடியில் ராணுவ காரிடார் அமையவுள்ளது. துôய்மை இந்தியா, ஸ்மார்ட் சிட்டி திட்டங்களால் தமிழகத்தில் பல நகரங்கள் மிளிர்கின்றன. இதுபோல பல திட்டங்களால் தமிழகம் பயனடைந்து வரும் நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போன்றோர், தமிழகத்துக்கு என்ன செய்துள்ளது மத்திய அரசு என கேட்கின்றனர். அவர்கள் கேட்டுக் கொண்டே இருக்கட்டும், நாங்கள் செயலாற்றிக் கொண்டே இருப்போம். 
நடிகர் அஜித் வெளியிடுட்டுள்ள அறிக்கை நல்ல முடிவு, தெளிவானது. வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எழுந்த விவகாரத்தில், காங்கிரஸ், 3 மாநிலத்தில் வெற்றி பெற்றது மோசடி செய்து தானா ? என தெளிவு படுத்த வேண்டும். வாக்கு இயந்திரம் எந்தவிதத்திலும் தவறு இழைக்க முடியாது என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியிருப்பதை நம்ப வேண்டும். அதைவிடுத்து வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் எனக்கூறும் கட்சியினர் வந்து நிரூபிக்கலாம் என தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தபோது, ஏன், எந்த கட்சியும் செல்லவில்லை ? ஏனென்றால் அவர்களால் எதையும் நிரூபிக்க முடியாது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com