
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டிருப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் வாழ்த்துக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் முழு மனதோடு வரவேற்கிறேன். ராகுல் காந்திக்கு பக்க பலமாக செயலாற்றிடவும், காங்கிரஸ் பேரியக்கத்துக்கு மென்மேலும் வலுச் சேர்த்திடவும் பிரியங்கா காந்திக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மேலும், அவரோடு அறிவிக்கப்பட்டுள்ள மற்ற பொதுச்செயலாளர்களுக்கும் தமிழக காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார்.