
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதற்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மேக்கேதாட்டு அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடகம் அளித்துள்ளது.
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. எனவே, மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.