300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்; ரூ.3.42 லட்சம் கோடி முதலீடு: முதல்வர் பெருமிதம் 

சென்னை சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்திற்கு ரூ.3.42 லட்சம் கோடி முதலீடு கிடைக்கவுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 
300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்; ரூ.3.42 லட்சம் கோடி முதலீடு: முதல்வர் பெருமிதம் 

சென்னை: சென்னை சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்திற்கு ரூ.3.42 லட்சம் கோடி முதலீடு கிடைக்கவுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் புதன்கிழமை துவங்கி சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று ஆறு நாட்டு தூதர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக அரசுடன் 90-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களில் ஒரு சில பின் வருமாறு: 

*  ரூ.10,000 கோடிக்கு அதானி குழுமம் ஒப்பந்தம் 

* சிபிசிஎல் நிறுவனம் ரூ.27,400 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு  ஒப்பந்தம் 

* ரூ.23 ஆயிரம் கோடிக்கு என்.எல்.சி.நிறுவனத்துடன்  ஒப்பந்தம் 

* ஐசெர் நிறுவனத்துடன் ரூ.1500 கோடி ஒப்பந்தம்

*  ரூ.3,100 கோடிக்கு எம்ஆர்எஃப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் 

 * ரூ.1,250 கோடிக்கு பிஎஸ்ஏ நிறுவனத்துடன் ஒப்பந்தம் 

* சாய் பல்கலைக்கழகத்துடன் ரூ.580 கோடிக்கு ஒப்பந்தம் 

* அலைன்ஸ் நிறுவனத்துடன் ரூ.9,488 கோடிக்கு ஒப்பந்தம் 

* எம்.எஸ்.எம்.இ என்ற 12 ஆயிரம்  சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் ரூ.30 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் 

மாநாட்டின் நிறைவில்  முதல்வர் பழனிசாமி பேசியதாவது: 

இரண்டு நாட்களாக நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.  கணிசமாக வெளிநாடு மற்றும் உள்நாட்டு தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது.  இம்மாநாட்டின் பெறப்பட உள்ள முதலீடுகளால் தமிழகத்தில் 50,000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. 

மாநாட்டிலகையெழுத்தாகியுள்ள 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.3.42 லட்சம் கோடி முதலீடு கையெழுத்தானது . தொழில் நிறுவனங்கள் முதலீடு மூலம் 10.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.  

மாநாட்டில் பங்கு பெற்று தமிழகத்தில் முதலீடு செய்த நிறுவனங்களுக்கு எனது நன்றி. 

இவ்வாறு அவர் பேசினார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com