சுடச்சுட

  

  தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை முதல் துவக்கம்: பள்ளிக் கல்வித்துறை

  By DIN  |   Published on : 28th January 2019 08:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  strike

   

  சென்னை: தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை முதல் துவங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

  ஊதிய உயர்வு மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ  ஜியோ அமைப்பினர் கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள்  பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பயிற்சி ஆசிரியர்கள் அவ்விடங்களில் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு ஏற்கனவே எச்சரித்தது.

  அதேசமயம்  காலக்கெடுவுக்கு பின்னர் பணிக்கு வரும் ஆசிரியர்கள், ஏற்கெனவே பணியாற்றிய இடங்களிலேயே மீண்டும் பணியாற்றுவதற்கான உத்தரவாதம் வழங்க முடியாது என்றும், குறிப்பிட்ட வருவாய் மாவட்டத்தில் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் பணிக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தமிழக அரசு கூறியிருந்தது.

  இதனிடையே, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக்கூறி, சென்னையில் 12 ஆசிரியர்களும், காஞ்சிபுரத்தில் 11 ஆசிரியர்களும், திருவள்ளூரில் 5 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

  இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை முதல் துவங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

  இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

  ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அவர்கள் திரும்பவிட்டால் அவர்களது இடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நாளை முதல் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai