சுடச்சுட

  

  நடைபெற இருந்த தொடர் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது: தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு 

  By DIN  |   Published on : 30th January 2019 04:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  secretariate

   

  சென்னை: வரும் பிப்ரவரி 1 - ஆம் தேதி முதல் நடைபெற இருந்த தொடர் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டதாக, தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

  ஊதிய உயர்வு மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ  ஜியோ அமைப்பினர் கடந்த 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  அவர்களது போராட்டம் ஒரு வாரமாக தொடந்த நிலையில் தலைமைச் செயலக ஊழியர்கள் வரும் வெள்ளி முதல் தொடர் வேலைநிறுத்தம் செய்யப்  போவதாக திங்களன்று அறிவிப்பு வெளியானது. 

  இதுதொடர்பாக தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத் தலைவரான அந்தோணிசாமி திங்களன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

  ஜாக்டோ  ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தலைமைச் செயலக ஊழியர்களும் வெள்ளி முதல்  தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.  அதற்கு முன்னோட்டமாக வரும் புதன்கிழமையன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்களை அரசு உடனே அழைத்துப் பேசி, சுமுகத் தீர்வு காண  வேண்டும்.

  இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

  அதேசமயம் புதனன்று அடையாள வேலைநிறுத்தம் செய்து வேலைக்கு வராவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலக ஊழியர்களுக்கு தலைமைச் செயலளார் கிரிஜா வைத்தியநாதன் செவ்வாயன்று எச்சரிக்கை விடுத்தார்.

  இதுதொடர்பாக அவர் விடுத்திருந்த அறிக்கையில் தலைமைச் செயலக ஊழியர்கள் புதன்கிழமை அடையாள வேலைநிறுத்தம் செய்து வேலைக்கு வராவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  ஒருவேளை புதன்கிழமை அவசர விடுப்பு எடுத்தால் அதற்கான காரணங்கள் தீவிரமாக ஆராயப்படும்.

  இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில் வரும் பிப்ரவரி 1 - ஆம் தேதி முதல் நடைபெற இருந்த தொடர் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டதாக, தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

  இதுதொடர்பாக தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத் தலைவரான அந்தோணி சாமி புதனன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக புதனன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம்.

  தற்போது முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரின் வேண்டுகோளினை ஏற்று பிப்ரவரி 1 - ஆம் தேதி முதல் நடைபெற இருந்த தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுகிறோம்.

  மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி போராட்டத்தைக் கைவிடுமாறு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுகிறோம்.

  இன்று அடையாள வேலை நிறுத்தம் செய்த நாங்கள் உட்பட  அனைத்து ஊழியர்களுக்கும் 'நோ ஒர்க்; நோ பே' என்னும் என்னும் அடிப்படையில் ஊதிய பிடிப்பு தவிர வேறு எதுவும் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்றும் அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம்.

  இவ்வாறு அவர் தெரிவைத்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai