சென்னை: அரசியல் காலண்டரில் கடைசிப்பக்கம் என்பது யாருக்குமே இல்லை என்று மு.க. அழகிரிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி இன்று தனது 68-வது பிறந்தநாளை அமைதியான முறையில் கொண்டாடினார். அவரது இல்லத்தில் அவருக்கு ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அரசியல் காலண்டரில் கடைசிப்பக்கம் என்பது யாருக்குமே இல்லை என்று மு.க. அழகிரிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மு.க.அழகிரிக்கு தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அவர், "அரசியல் காலண்டரில் கடைசிப்பக்கம் என்பது யாருக்குமே இல்லை; எதிர்காலத்தில் எழுந்து வருவீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.