
தமிழக முதல்வர் பழனிசாமியை, புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட தலைமைச் செயலர் க. சண்முகம், தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் நேற்று பணி ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைமைச் செயலராக க. சண்முகம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதேப்போல தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநராக இருந்த டி.கே. ராஜேந்திரன் ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்ட ஜே.கே. திரிபாதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இருவரும் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.