சுடச்சுட

  

  இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கும்: செங்கோட்டையன் திட்டவட்டம்

  By DIN  |   Published on : 02nd July 2019 01:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  senkottaian


  சென்னை: இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

  புதிய தேசியக் கல்விக் கொள்கையில் மாணவர்களுக்கு 3 மொழிகளைக் கற்பிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 3 மொழிகளைப் பின்பற்றினால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படும் என்று கூறினார்.

  சட்டப்பேரவையில் இன்று திமுக உறுப்பினர் சுரேஷ் ராஜன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என்ற முடிவில் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai