சுடச்சுட

  

  நீதிபதிக்கு மிரட்டல்: 4 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

  By DIN  |   Published on : 02nd July 2019 03:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் மாவட்ட முன்சீப் மற்றும் பொறுப்பு குற்றவியல் நீதிமன்ற நீதிபதியான ஜெய்சங்கருக்கு மிரட்டல் விடுத்த 4 பேருக்கு எதிராக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது. 
  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நீதிமன்றத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு மாவட்ட கூடுதல் முன்சீப் மற்றும் பொறுப்பு குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ஜெய்சங்கர். இந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நீதிபதி ஜெய்சங்கர் நீதிமன்ற பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த செந்தில்குமார், சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன், திருவண்ணாமலையைச் சேர்ந்த எஸ்.ரகுபதி, திண்டிவனத்தைச் சேர்ந்த ஜெய்னுதீன் ஆகியோர் மிரட்டல் விடுத்து நீதிபதியை தாக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மற்றும் உயர்நீதிமன்றப் பதிவாளர் விசாரணை நடத்தி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். 
  இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்தனர். மேலும், இதுதொடர்பாக 4 பேரும் இரண்டு வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai