சுடச்சுட

  
  tanjour

  தஞ்சாவூர் பெரியகோயிலில் மகா வாராஹி அம்மனுக்கு திங்கள்கிழமை  செய்யப்பட்ட இனிப்பு அலங்காரம்.


  தஞ்சாவூர் பெரியகோயிலில் மகா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
  இக்கோயிலில் மகா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி பெருவிழா 11 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இதன்படி, 17-ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
  இதையொட்டி, காலையில் மஹாகணபதி ஹோமம், அபிஷேகமும், பின்னர், வாராஹி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றது. மாலையில் வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
  விழா நாள்களில் நாள்தோறும் மாலையில் வாராஹி அம்மனுக்கு அலங்காரமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. செவ்வாய்க்கிழமை மஞ்சள் அலங்காரமும், புதன்கிழமை குங்கும அலங்காரமும், 4-ஆம் தேதி சந்தன அலங்காரமும், 5ஆம் தேதி தேங்காய்ப்பூ அலங்காரமும், 6-ஆம் தேதி மாதுளை அலங்காரமும்,  7ஆம் தேதி நவதானிய அலங்காரமும்,  8-ஆம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 9ஆம் தேதி கனிவகை அலங்காரமும், 10-ஆம் தேதி காய்கறி அலங்காரமும், 11-ஆம் தேதி புஷ்ப அலங்காரமும், திருவீதி உலாவும் நடைபெறவுள்ளன.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai