சுடச்சுட

  


  காங்கிரஸ்  முன்னாள்  எம்.எல்.ஏ. தே.குமாரதாஸ் மறைவுக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 
  பேரவை திங்கள்கிழமை காலை கூடியதும்,  முன்னாள் உறுப்பினர் குமாரதாஸ் மறைவுக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் இரங்கல் குறிப்பு வாசித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 1985-88, 1991-96, 1996-2001,  2001-2006 ஆகிய ஆண்டுகளில் கிள்ளியூர் தொகுதியில் இருந்து சட்டப் பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். சிறந்த முறையில் மக்கள் பணியாற்றிய அவரது மறைவுக்கு பேரவை ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறது என்றார்.
  இதைத் தொடர்ந்து, குமாரதாஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பேரவை உறுப்பினர்கள் அனைவரும் சில விநாடிகள் எழுந்து நின்று அமைதி காத்தனர். இதன்பின், பேரவை நிகழ்வுகள் தொடங்கின.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai