சுடச்சுட

  

  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப் பிரிவுகள்: அமைச்சர் அன்பழகன் 

  By DIN  |   Published on : 02nd July 2019 04:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  anbazhagan

   

  சென்னை:  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப் பிரிவுகள் துவங்கப்படும் என்று  உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

  செவ்வாயன்று சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். அவை பின்வருமாறு:

  தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப் பிரிவுகள் துவங்கப்படும்

  அத்துடன் பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்படும்.

  கோவை, சேலம், திருச்சி, மதுரை மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் ரூ.1 கோடி செலவில் இந்த கலாந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்படும்.

  அரசு பாலிடெக்னிக்  கல்லூரிகளில் 100 டிப்ளமோ  மாணவர்களின் திறனை  உலகளாவிய அளவில் மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும். 

  இந்த தொழில்நுட்ப பயிற்சி திட்டம் ரூ.1.50 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai