நம்பிக்கையில்லாத் தீர்மானம் வலியுறுத்தப்படவில்லை: அவைத் தலைவர்

பேரவைத் தலைவர் மீது அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்க்கட்சி தலைவரால் வலியுறுத்தப்படவில்லை என்று அவைத் தலைவர் பி.தனபால் தெரிவித்தார்.

 சட்டப் பேரவையில் கேள்வி நேரத்துக்குப் பிறகு அவர் பேசியது:-
பேரவை விதி 68-ன் கீழ் அளிக்கப்பட்ட தீர்மானம் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 179-ன் படியும், சட்டப் பேரவை விதி 69-ன் கீழும் 14 நாள்கள் முன்னறிவிப்புக் காலம் முடிவடைந்தவுடன் கூட்டப் பெறும் முதல் கூட்ட நாளில் அலுவல் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். 
14 நாள்கள் முடிவடைந்த நிலையில், அந்தத் தீர்மானம் பேரவைத் தலைவர் தொடர்புடையது என்பதால், அதுகுறித்த முடிவை பேரவைதான் எடுக்க இயலும். இந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதியன்று எதிர்க்கட்சித் தலைவர் அளித்த கடிதத்தின் அடிப்படையில் (தீர்மானத்தை வலியுறுத்த மாட்டோம் எனத் தெரிவித்து), அவரால் கொடுக்கப்பட்ட தீர்மானம் பேரவையில் வலியுறுத்தப்படவில்லை என்று அவைத் தலைவர் பி.தனபால் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com