
டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மக்கள் புறக்கணித்து விட்டதாக அவருக்கு ஆதரவு அளித்து வந்த அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை எம்.எல்.ஏ., ரத்தினசபாபதி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
இடையில் வேறு அணிக்குச் சென்றது அனைவருக்கும் தெரியும். டிடிவி தினகரன் தனிக் கட்சி தொடங்கியதும் அங்கிருந்து விலகி விட்டேன். மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று விருப்பத்தோடு இருந்தேன்.
முதல்வரைச் சந்தித்து தொடர்ந்து கட்சியில் செயல்படுவதாகத் தெரிவித்தேன். பேரவைத் தலைவர் எங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் இருந்து இடைக்கால தடைதான் வாங்கியிருந்தோம். அதனை வாபஸ் பெறுவேன். டிடிவி தினகரன் கட்சியை மக்கள் புறக்கணித்து விட்டார்கள் என்றார்.