இயக்குநர் சங்கத் தேர்தல் தேதி மாற்றம்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு வரும்  21- ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 16-ஆம் தேதி நடைபெறும்


தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு வரும்  21- ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 16-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அத்தேதி மாற்றப்பட்டுள்ளது. 
விக்ரமன் தலைமையிலான நிர்வாகக் குழு, இயக்குநர் சங்க நிர்வாகத்தை கவனித்து வந்தது. இந்த நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததை யடுத்து, புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட வேண்டும்.  இந்த நிலையில், பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் பாரதிராஜா சங்கத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், தலைவர் பதவியை பாரதிராஜா திடீரென ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தேர்தல் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தலைவர்,  துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com