குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி: தமிழக அரசின் பயிற்சி மையம் அறிவிப்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான முதன்மை (மெயின்) தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சிக்கான அறிவிப்பை தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் வெளியிட்டுள்ளது.


ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான முதன்மை (மெயின்) தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சிக்கான அறிவிப்பை தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த மையத்தின் பயிற்சி இயக்குநர் எம்.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வு செப்டம்பர் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சியை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் வழங்க உள்ளது. கடந்த ஜூன் 6-ஆம் தேதி நடைபெற்ற முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியான உடன், இந்த முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி தொடங்கப்பட உள்ளது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் ஆண், பெண் இரு பாலரும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம். இரண்டு மாதங்கள் நடைபெறும் இந்த உண்டு, உறைவிடப் பயிற்சிக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.
இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை www.​civilservi​ce​co​a​ching.​com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியான 48 மணி நேரத்துக்குள் நேரிலோ அல்லது ai​cs​c​c.gov@gm​ail.​com  என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com