Enable Javscript for better performance
காஞ்சிபுரம் அத்திவரதர் விழா: தேவஸ்தானம் பதில் மனு தாக்கல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    காஞ்சிபுரம் அத்திவரதர் விழா: தேவஸ்தானம் பதில் மனு தாக்கல்  

    By DIN  |   Published On : 08th July 2019 01:55 AM  |   Last Updated : 08th July 2019 01:55 AM  |  அ+அ அ-  |  

    HighCourt

    காஞ்சிபுரம் அத்திவரதர் விழாவில் தாத்தாச்சாரியர்கள் வம்சா வழியினருக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜ சுவாமி தேவஸ்தானத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     சென்னை உயர்நீதிமன்றத்தில், சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டி.கே.சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆதி அத்திவரதர் சிலை கடந்த ஜூன் 28-ஆம் தேதி வெளியே எடுக்கப்பட்டது. பக்தர்களின் பார்வைக்காக 48 நாள்கள், கோயில் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதர், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சியளித்து வருகிறார்.
     அத்திவரதரை பல்வேறு படையெடுப்புகளின் போது பாதுகாத்ததுடன், பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தக் கோயிலை நிர்வகித்து வருபவர்கள், தாத்தாச்சாரியர்களின் வம்சாவழியைச் சேர்ந்த பரம்பரை அறங்காவலர்கள். ஆனால், எங்களுக்கு அத்திவரதர் விழாவில் எந்தவிதமான முக்கியத்துவமும் அளிப்பதில்லை. எனவே 48 நாள்களுக்கு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதருக்கான திருவிழாவில் முதல் தீர்த்தம் மற்றும் பூஜைகளில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
     இந்த மனு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சின்ன காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜ சுவாமி தேவஸ்தான உதவி ஆணையர் என்.தியாகராஜன் சார்பில் இந்து சமய அறநிலையத் துறை அரசு சிறப்பு வழக்குரைஞர் எம்.மகாராஜா தாக்கல் செய்துள்ள பதில்மனுவில், மனுதாரரின் மூத்த சகோதரர்களான தாத்தாச்சாரியார்கள் மந்திரபுஷ்பம் மற்றும் வேதபாராயணம் ஓதிய நிலையில் தான் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார். அவர்களின் முன்னிலையில் தான், அத்திவரதருக்கு வசந்த மண்டபத்தில் பல்வேறு பூஜைகளும், ஹோமங்களும் செய்யப்பட்டன. தாத்தாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதிய பிறகு தான் அத்திவரதருக்கு திருவாராதனமும் செய்யப்பட்டது. நைவேத்திய பிரசாதம் மற்றும் துளசி தீர்த்த பிரசாதம் முதலில் தாத்தாச்சாரியார்களுக்கு வழங்கப்பட்ட பிறகே மற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையே 48 நாள்களுக்கும் பின்பற்றப்படும் என அந்த பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
     
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp