முன்னாள் எம்.பி. ஆர்.ராமகிருஷ்ணன் மறைவு

மாநிலங்களவை அதிமுக முன்னாள் உறுப்பினரும், மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் தலைவருமான ஆர்.ராமகிருஷ்ணன் (73) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
முன்னாள் எம்.பி. ஆர்.ராமகிருஷ்ணன் மறைவு

மாநிலங்களவை அதிமுக முன்னாள் உறுப்பினரும், மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் தலைவருமான ஆர்.ராமகிருஷ்ணன் (73) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
 மறைந்த ஆர்.ராமகிருஷ்ணன் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தில் சிறப்பு அலுவலராகத் தனது பணியைத் தொடங்கினார். பின்னர் டிவிஎஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், இயக்குநராக ஓய்வு பெற்றார்.
 கடந்த 1981-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரின் பரிந்துரையின் பேரில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சென்னை மாநகர ஷெரீப்பாகவும் பதவி வகித்துள்ளார்.
 குதிரைப் பந்தயங்களில் அதிக ஆர்வம் கொண்ட ராமகிருஷ்ணன், மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அவருக்கு மகன், மகள் உள்ளனர். மறைந்த ஆர்.ராமகிருஷ்ணனின் இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை (ஜூலை 8) நடைபெறும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com