கரூர் நீதிபதி வீட்டில் முகிலன் ஆஜர்: 15 நாள் காவலில் வைக்க உத்தரவு

கரூர் நீதிமன்ற நீதிபதி முன்பு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஆஜர்படுத்தப்பட்ட சூழலியல் செயற்பாட்டாளர், பாலியல் வழக்கில் கைதான முகிலனை 15 நாள்
நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்த முகிலனை அழைத்து வரும் போலீஸார்.
நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்த முகிலனை அழைத்து வரும் போலீஸார்.


கரூர் நீதிமன்ற நீதிபதி முன்பு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஆஜர்படுத்தப்பட்ட சூழலியல் செயற்பாட்டாளர், பாலியல் வழக்கில் கைதான முகிலனை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்த  சூழலியல் செயல்பட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென காணாமல் போனார். இந்நிலையில், அவர் ஆந்திர மாநிலம், திருப்பதியில் கடந்த 6-ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டார். இந்நிலையில், கரூர் மாவட்டம்,  குளித்தலையைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் முகிலன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். சென்னை ராயபுரத்தில் வசிக்கும் எழும்பூர் நீதித் துறை நடுவர் ரோஸ்லின் துரை வீட்டில் முகிலனை  ஞாயிற்றுக்கிழமை இரவு ஆஜர்படுத்தினர். மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, அவர், எழும்பூர் சென்னை பெருநகர  கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிபதி ரவி, பாலியல் வன்கொடுமை வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி சிபிசிஐடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள், முகிலனை அங்கிருந்து கரூர் அழைத்துச் சென்றனர். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கரூர் ஜேஎம்-2 நீதிபதி விஜய் கார்த்திக்கின் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முகிலனைப் போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதி, முகிலனை 15 நாள் காவலில் வைக்குமாறும், வரும் 24-ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸார் அவரை திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.  
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முகிலன் மனைவி பூங்கொடி, முகிலன் மீது அரசாங்கம், ஆலை நிர்வாகம் திட்டமிட்டு பழிபோட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வீடியோ வெளியிட்டதால், அவரை கடத்தி சித்திரவதை செய்துள்ளனர். மேலும், இதுதொடர்பான சட்ட நடவடிக்கை எடுப்போம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com