வட மாநிலத் தொழிலாளர்கள் அதிகரிப்பு ஏன்?: திமுக கேள்விக்கு அமைச்சர் விளக்கம்

குறைவான கூலியே கிடைக்கும் என்பதால் தமிழக இளைஞர்கள் செய்ய விரும்பாத பணிகளிலேயே வட மாநிலத்தவர் பணியமர்த்தப்படுவதாக அமைச்சர் நிலோபர் கபீல் விளக்கம் அளித்தார். 
வட மாநிலத் தொழிலாளர்கள் அதிகரிப்பு ஏன்?: திமுக கேள்விக்கு அமைச்சர் விளக்கம்


குறைவான கூலியே கிடைக்கும் என்பதால் தமிழக இளைஞர்கள் செய்ய விரும்பாத பணிகளிலேயே வட மாநிலத்தவர் பணியமர்த்தப்படுவதாக அமைச்சர் நிலோபர் கபீல் விளக்கம் அளித்தார். 
சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதம்:
தா.மோ.அன்பரசன் (திமுக): ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்றபோது அங்கு அதிக வட மாநிலத்தவர்களே இருந்தனர். தொழில் நிறுவனங்களில் நமது இளைஞர்களுக்கு வாய்ப்புக் கேட்டாலும் கொடுப்பதில்லை. எனவே, வேலைவாய்ப்புகளில் நமது இளைஞர்களுக்கு 60 சதவீத வாய்ப்புகள் அளிக்க வேண்டும்.
தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்: தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும்போதே வேலைவாய்ப்புகள் குறித்து அறிவுறுத்தப்படுகின்றன.
அன்பரசன்: அந்த ஒப்பந்தங்களை தொழில் நிறுவனங்கள் மதிப்பதில்லை. வட மாநிலத்தவருக்கே வாய்ப்புகள் தருகிறார்கள்.
அமைச்சர் நிலோபர் கபீல்: குறைவான கூலி வேலைக்காகவே வட மாநில இளைஞர்கள் தமிழகத்துக்கு வருகிறார்கள். நமது இளைஞர்கள் எந்த வேலையை செய்யவில்லையோ, அந்த வேலைக்கே அவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.
அன்பரசன்: தொழிலாளர்கள் தங்குவதற்காக சென்னை அருகே இரண்டு தங்குமிடங்களை அரசு அமைத்துள்ளது. இந்த இடங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த சமூக விரோதிகள் தங்கியிருப்பதாக புகார்கள் வந்துள்ளன. தங்கும் இடங்களை ஆய்வு செய்து உண்மையான தொழிலாளர்கள் மட்டுமே தங்கிட அனுமதிக்க வேண்டும்.
அமைச்சர் நிலோபர் கபீல்: புதிதாக திறக்கப்பட்ட தங்குமிடங்களில் ஆயிரம் பேர் வரை தங்கலாம். சட்ட விரோதமாக யாரும் தங்கவில்லை. உரிய அடையாள அட்டை வைத்திருப்போர்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com