சுடச்சுட

    

    ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் ரயில் புறப்பட்டது

    By DIN  |   Published on : 12th July 2019 11:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    train

    ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் ரயில் புறப்பட்டது.

    சென்னையில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் எடுத்துச் செல்வதற்காக தமிழக அரசு ரூ. 65 கோடி நிதி ஒதுக்கி, அதற்காக பணிகளை மேற்கொண்டது. 

    இதற்காக சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஜோலார்பேட்டை மேட்டுச்சக்கரம், கேதாண்டப்பட்டி, பார்சம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரை ரயில் மூலம் எடுத்துச் செல்வதற்கான இடத்தைத் தேர்வு செய்தனர்.

    அதன்படி, மேட்டுச்சக்கரகுப்பம் பகுதியில் உள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் நிரப்பி, அதிலிருந்து பார்சம்பேட்டை ரயில்வே கேட் வரை 3.5 கி.மீ. தொலைவுக்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டது. ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 50 வேகன்கள் கொண்ட ரயில் ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு வேகனில் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே நிரப்பப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

    மொத்தம் 50 வேகன்கள் உள்ள இந்த ரயிலில் சோதனை ஓட்டமாக இரு நாள்களுக்கு 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஒரு முறை கொண்டு செல்லப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு இருமுறை கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. ராட்சத குழாய் மூலம் ரயில் நிலையத்துக்கு விநியோகமாகும் குடிநீரை வேகன்களில் ஏற்றுவதற்கு முன்பு ஒவ்வொரு முறையும் பரிசோதிக்கப்படுகிறது. இந்நிலையில் முதல்கட்டமாக ஜோலார்பேட்டையில் இருந்து 25லட்சம் லிட்டர் குடிநீருடன் சென்னைக்கு ரயில் புறப்பட்டுள்ளது. ரயிலை குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் மகேஷ்வரன் தொடக்கி வைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai