சுடச்சுட

    

    பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு: இன்று மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு

    By DIN  |   Published on : 12th July 2019 02:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


      தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் www.dge.tn.nic.in  என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. 
    இதையடுத்து தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
    இதையடுத்து மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு வரும் 15, 16 ஆகிய இரு நாள்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.  
    இரு தாள்கள் கொண்ட மொழிப் பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.305,  பிற பாடங்களுக்கு ரூ.205 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
     இந்தத் தகவலை அரசுத் தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai