சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்த முக்கியத் திட்டங்கள்: உங்களுக்குமானதும் இருக்கலாம்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பழனிசாமி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்த முக்கியத் திட்டங்கள்: உங்களுக்குமானதும் இருக்கலாம்!


தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பழனிசாமி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் சிறப்புத் தொகுப்பு இதோ..

தமிழ்நாடு மின்னாளுமை முகமை மூலம், பிறப்பு முதல் இறப்பு வரையிலான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் “குடிமக்கள் பெட்டகத்திலிருந்து” விண்ணப்பிக்காமலேயே தானாகவே வழங்கும் “மக்களைத் தேடி அரசு” திட்டம் ரூ.90 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டுவதற்கும், முதலீட்டாளர்களை அடையாளம் காணவும் தனித்தனியாக சிறப்பு அமைவுகள் அமைக்கப்படும்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏதுவாக முதலீட்டு தூதுவர்களை உருவாக்கி, “யாதும் ஊரே” என்ற தனி சிறப்பு பிரிவு மற்றும் வலைதளம் ரூ.60 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

நம்பிக்கை இணையம் (Blockchain) மூலம் பரிவர்த்தனைகளில் உள்ள உண்மைத் தன்மையினை அறிந்திடும் வகையில் ரூ.40.80 கோடி செலவில் நம்பிக்கை இணைய கட்டமைப்பு (Blockchain Backbone Infrastructure) ஒன்று அமைக்கப்படும். 

12 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு உணவுடன் கூடிய தங்கும் விடுதிகள் ரூ.64.41 கோடி செலவில் புதிதாக ஏற்படுத்தப்படும். 

11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நீண்ட கால மற்றும் குறுகிய கால புதிய தொழிற்பிரிவுகள் ரூ.44.19 கோடி செலவில் தொடங்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் - பெரும்பாக்கம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் - செம்போடை ஆகிய இரண்டு இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.26 கோடி செலவில் துவக்கப்படும். 

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரில் வான்வெளி மற்றும் பாதுகாப்புப் பூங்காவில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோருக்கான சிறப்பு மையம் நிறுவப்படும் 

கோயம்புத்தூரில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் கூடுதலாக ஒரு தொழில்நுட்ப வளாகம் கட்டப்படும்.

குறு மற்றும் சிறு நிறுவனங்கள் தங்களது உற்பத்தித் திறனை மேம்படுத்த தற்போது வழங்கப்பட்டு வரும் 3 விழுக்காடு வட்டி மானியம் 6 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் தொழில்மயமாக்க, குறைந்தபட்சம் 100 ஏக்கர் அல்லது அதற்கு மேல் நிலம் வைத்துள்ள தனியார் நில உரிமையாளர்களுடன் இணைந்து கூட்டாண்மை முறையில், தொழிற் பூங்காக்களை சிப்காட் நிறுவனம் உருவாக்கும்.

சிப்காட் சிறுசேரி தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர ஏற்றுமதியாளர்கள் பயன் பெறும் வகையில் வணிக வசதிகள் மையம் ஒன்று ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

நடப்பாண்டில் வல்லம் - வடகால் மற்றும் இராணிப்பேட்டை சிப்காட் தொழில் பூங்காக்களில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் பணியாளர்களுக்கு குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் - வடகால் மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பூங்காக்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய (Plug & Play facility) தொழிற்கூட கட்டடங்கள் ரூ.50 கோடி மதிப்பில் கட்டப்படும்

சிப்காட் நிறுவனம் மூலம் தூத்துக்குடி மாவட்டம், முல்லக்காடு கிராம பகுதியில் ரூ.634 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும்.

“தொழில் தோழன்” (Biz Buddy) என்ற தொழில் நிறுவனங்களுக்கான ஒருங்கிணைந்த இணைய அடிப்படையிலான குறைதீர் வழிமுறை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

20 ஏக்கர் அல்லது அதற்கு மேலாக நிலம் அளிக்க விரும்பும் தனியார் நில உரிமையாளர்களையும், தொழில் முதலீடு செய்ய விரும்பும் தொழில் முனைவோர்களையும் இணைக்கும் பாலமாக ஒரு வலைதளம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்

புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பிரிவு ஒன்று துவங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com