ஊதிய உயர்வு: பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை

பகுதி நேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக பணி நிரந்தரம் செய்யும் வரை அவர்களுக்கு மாத ஊதியத்தை ரூ.15 ஆயிரமாக அதிகரித்து உத்தரவிட


பகுதி நேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக பணி நிரந்தரம் செய்யும் வரை அவர்களுக்கு மாத ஊதியத்தை ரூ.15 ஆயிரமாக அதிகரித்து உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
 இது தொடர்பாக கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   தமிழகத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2012 மார்ச் மாதம் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கு, 16, 549 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
 தற்போது, 12 ஆயிரம் பேர் மட்டும் பணிபுரிகின்றனர். பணியில் சேர்ந்தபோது ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது. கடந்த எட்டு ஆண்டுகளில் இவர்களுக்கு ரூ.2,700 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.  
பகுதி நேர ஆசிரியர்கள் தற்போது மாத ஊதியமாக ரூ.7,500 பெற்று வருகின்றனர். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படாததால், பகுதி நேர ஆசிரியர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
எனவே, சிறப்பாசிரியர்களாக பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பை வெளியிடும் வரை, அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். இது தொடர்பான மனு, முதல்வரின் தனிப்பிரிவில் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com