காவலர்கள் பணி வரன்முறை விவகாரம்:  தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு

காவலர்கள் பணி வரன்முறை விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
காவலர்கள் பணி வரன்முறை விவகாரம்:  தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு


காவலர்கள் பணி வரன்முறை விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
பணி வரன்முறை தொடர்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் உள்ளிட்ட 168 காவலர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். 
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரர் உள்ளிட்ட 168 காவலர்களையும் 2011-ஆம் ஆண்டில் இருந்து பணி வரன்முறை செய்து அவர்களுக்கான பணப் பலன்களை 6 வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. இதைத் தொடர்ந்து, 168 பேர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது.
 இந்த வழக்கை அண்மையில் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் தமிழக காவல்துறை டிஜிபி ஆகியோர் வரும் 17-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.
 இதனிடையே, இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை 10) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வில் தமிழக அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பாலாஜி ஸ்ரீனிவாசன் வியாழக்கிழமை ஆஜராகி, இந்த மனுவை அவசரமாக வரும் திங்கள்கிழமை விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால், இந்த கோரிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நிராகரித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com