திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோயில் சம்ப்ரோக்ஷணம்

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள திருக்கண்ணங்குடி தாமோதர நாராயணப் பெருமாள் கோயில் சம்ப்ரோக்ஷணம் வியாழக்கிழமை
திருக்கண்ணங்குடி தாமோதர நாராயணப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சம்ப்ரோக்ஷணம்.
திருக்கண்ணங்குடி தாமோதர நாராயணப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சம்ப்ரோக்ஷணம்.


நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள திருக்கண்ணங்குடி தாமோதர நாராயணப் பெருமாள் கோயில் சம்ப்ரோக்ஷணம் வியாழக்கிழமை  நடைபெற்றது. 
திருக்கண்ணங்குடியில் உள்ள ஸ்ரீஅரவிந்தநாயகி சமேத  ஸ்ரீதாமோதர நாராயணப் பெருமாள் கோயில், பஞ்ச கிருஷ்ண தலங்களுள் முதன்மையானதாகவும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.  திருமங்கை ஆழ்வாரால் 10 பாசுரங்களில் பாடப்பட்ட இக்கோயில், ராமானுஜர் மற்றும் மணவாள மாமுனிகளால் மங்களாசாசனம் செய்யப்பட்டத் தலமாகக் குறிப்பிடப்படுகிறது.  
பல்வேறு ஆன்மிகச் சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு,  ஸ்ரீதேவி, பூமிதேவி, நீளாதேவி சமேத ஸ்ரீ தாமோதர நாராயணப் பெருமாள், ஸ்ரீஅரவிந்த நாயகி தாயார், ஸ்ரீ ராமர், ஸ்ரீ வீற்றிருந்த பெருமாள் மற்றும் ஆழ்வார்கள், உடையவர், ஸ்ரீமணவாள மாமுனிகள் சன்னிதிகளும், கோயிலின் ராஜகோபுரம் மற்றும் மதில் சுவர்களும் அண்மையில் புனரமைக்கப்பட்டன. 
இதைத் தொடர்ந்து, கோயிலின் சம்ப்ரோக்ஷண விழா சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டன.  திங்கள்கிழமை மாலை யாக பூஜைகள் தொடங்கப்பட்டன.  வியாழக்கிழமை காலை 6-ஆம் கால யாக பூஜையின் நிறைவில் மகா பூர்ணாஹுதியும், அதைத் தொடர்ந்து கடம் புறப்பாடும் நடைபெற்றன. 
இன்னிசை வாத்திய முழக்கங்களுடன், வேத, மந்திரங்கள் முழங்க காலை 11.05 மணிக்கு ஸ்ரீவீற்றிருக்கும் பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஸ்ரீ தாமோதர நாராயணப் பெருமாள் மற்றும் அனைத்து விமானங்களின் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. பின்னர், திருவாராதன நிகழ்ச்சிகளும், சாற்று முறையும் நடைபெற்றன. மாலையில் திருக்கல்யாண உத்ஸவமும், இரவு கருட சேவை மற்றும் வீதியுலாவும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com