ரூ.20 கோடியில்  தொழில் பூங்காக்களின் உள்கட்டமைப்பு வசதிகள்: அமைச்சர் எம்.சி.சம்பத்

சிப்காட் தொழில் பூங்காக்களின் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.20 கோடியில்  மேம்படுத்தப்படும் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவித்தார்.


சிப்காட் தொழில் பூங்காக்களின் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.20 கோடியில்  மேம்படுத்தப்படும் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் எம்.சி.சம்பத் வெளியிட்ட அறிவிப்புகள்:
கடலூர் சிப்காட் தொழில் பூங்காவில் நாளொன்றுக்கு 20 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை அமைக்க ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
சிப்காட் தொழில் பூங்காக்களில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன் தொழில் பூங்காக்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
சிப்காட் தொழில் பூங்காக்களை இயற்கை எழில்மிகு தொழில் பூங்காக்களாக மேம்படுத்த ரூ.20 கோடியில்  விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். சிப்காட் தொழில் பூங்காக்களில் ரூ.9.65 கோடியில்  2.32 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.
வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த துவக்கத் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க,  டைடல் பார்க் தொழில் முனைவோர்  மையம், டைடல் பார்க் தரமணி வளாகத்தில் முதல்கட்டமாக சுமார் 3 ஆயிரம் சதுர அடியில் ரூ.4.65 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com