
நடமாடும் ஊர்தி மூலம் மதுபானங்கள் விற்க வேண்டும் என்று கொங்குநாடு இளைஞர் பேரவை உறுப்பினர் தனியரசு கூறியதால், பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தனியரசு பேசியது:
மதுபானக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மது வாங்க வரும்போது விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனால், நடமாடும் ஊர்திகளில் மதுபானங்கள் விற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு, திமுக - அதிமுக உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை ஏற்பட்டது.