Enable Javscript for better performance
மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை- Dinamani

சுடச்சுட

    

    மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை

    By DIN  |   Published on : 13th July 2019 12:58 AM  |   அ+அ அ-   |    |  

    HighCourtch


    தமிழக முதல்வரை விமர்சித்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருக்கு எதிரான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில், கடந்த பிப்ரவரி மாதம் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்தார். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக முதல்வர் சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம், நேரில் ஆஜராக மு.க.ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பியது. 
    இதேபோன்று, கரூரில் கடந்த ஏப்ரல் மாதம் காவிரி விவகாரம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக முதல்வரை விமர்சித்துப் பேசினார். இதனையடுத்து, கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக டிடிவி தினகரனுக்கு கரூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
    இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. 
    இந்நிலையில் இந்த வழக்குகள், நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து வழக்குகளை விசாரித்த நீதிபதி, மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் ஆகியோருக்கு எதிராக அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணைக்காக இருவரும் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுக்கள் தொடர்பாக தமிழக அரசு 4 வார காலத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp