Enable Javscript for better performance
மு.க.ஸ்டாலின், வைகோ கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    நியூட்ரினோ ஆய்வு மையம்: மு.க.ஸ்டாலின், வைகோ கண்டனம்

    By DIN  |   Published on : 13th July 2019 01:10 AM  |   அ+அ அ-   |    |  

    STALINC1


    தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக  பொதுச்செயலர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:  தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்திருப்பது, தமிழக மக்களுக்கும் குறிப்பாக தேனிப் பகுதி மக்களுக்கும்  அதிர்ச்சியளித்துள்ளது. 
    தற்போதுள்ள அதிமுக அரசு, இத்திட்டத்துக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியையும், நகர்ப்புறத்துறை நியூட்ரினோ கட்டுமானத்துக்கான அனுமதியையும் வழங்கியுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. தேனி மாவட்டம், தேவாரம் அருகில் உள்ள பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணியை, தமிழக மக்களின் பாதுகாப்பு கருதி மத்திய பாஜக அரசு கைவிடவேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் இந்தத் திட்டத்துக்கு எதிராக உரிய அழுத்தம் கொடுத்து, மத்திய அரசை இத்திட்டத்தைக் கைவிட வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
    வைகோ: இது தொடர்பாக வைகோ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மேற்கு தொடர்ச்சி மலையில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகத்தால், தேனி மாவட்டம் மற்றும் கேரளப் பகுதிகளின் சுற்றுச்சூழல் கெடுவதுடன், நீராதாரமும் பாழாகும்.  அதனுடன் கடுமையான கதிரியக்க ஆபத்தும் ஏற்படும்.  
    பிரதமர் தலைமையில் நடைபெற்ற அணுசக்தித் துறையின் ஆய்வுக் கூட்டத்தில், நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசின் தலைமைச் செயலரைப் பொறுப்பாளராக நியமித்து, நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    இந்நிலையில், மாநிலங்களவையில் மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. 
    சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும், பசுமைத் தீர்ப்பாயத்திலும் நியூட்ரினோ தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கருத்தில் கொள்ளாமல், அனுமதி வழங்குவோம் என்று மத்திய அரசு கூறி இருப்பதுகண்டனத்துக்குரியது.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp