சுடச்சுட

  

  காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடாமல் புறக்கணிப்பு: கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 14th July 2019 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  alagiri

  காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாமல் தமிழக அரசு புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
   இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
   கல்வித் துறையில் மிகப்பெரிய புரட்சி செய்த காமராஜரைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாளை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி 2006-ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் மசோதாவை தாக்கல் செய்து சட்டமாக நிறைவேற்றினார். அனைத்துப் பள்ளிகளிலும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்த தமிழக அரசு நிதியிலிருந்து ரூ.1.47 கோடி ஒதுக்கப்பட்டது. இதனால் காமராஜரைப் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் மிகப்பெரிய வாய்ப்பு ஏற்பட்டது.
   ஆனால், அதிமுக ஆட்சி அமைந்தது முதற்கொண்டு காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுவதில் ஆர்வம் காட்டாமல் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் காமராஜர் பிறந்தநாள் விழாவைக் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட அதிமுக அரசுக்கு விருப்பம் இல்லாத காரணத்தால் இத்தகைய புறக்கணிப்பு ஏற்படுகிறது.
   இந்தப் போக்கை உடனடியாக நிறுத்தி, வரும் ஜூலை 15-ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுவதோடு, அதற்கான நிதியையும் ஒதுக்க வேண்டும். இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லையெனில் காமராஜரின் புகழுக்கு தமிழக அரசு செய்யும் மிகப்பெரிய துரோகமாகவே கருதப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai