சுடச்சுட

  
  VelumaniSP1

  அஞ்சல் துறை தேர்வுகளைத் தமிழிலேயே தொடர்ந்து நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
   இந்தியாவில் அஞ்சல் துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில், முதல் தாளுக்கான தேர்வில் இனி ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வு வினாத்தாள்கள் மட்டுமே மாநில மொழிகளில் இருக்கும் என்றும் அஞ்சல் துறை அறிவித்தது.
   இதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர்.
   அப்போது அவர் கூறும்போது, "அதிமுக ஆட்சி மறைந்த முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நடக்கக் கூடியது. மறைந்த தலைவர்களின் வழியைப் பின்பற்றியே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
   தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு வழிகளில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தற்போது அஞ்சல் துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தீர்வு காண்போம்' என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai