சுடச்சுட

    

    தேசத் துரோக வழக்கு: தண்டனையை எதிர்த்து வைகோ மேல்முறையீடு

    By DIN  |   Published on : 14th July 2019 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Vaiko

    தேசத் துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து, வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
     மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசினார். இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரணை செய்தது. இதில் வைகோவுக்கு, ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
     இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், வைகோ தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவில், "தேசத் துரோக சட்டப்பிரிவு 124(ஏ)-ன் விளக்கத்தை கீழமை நீதிமன்ற நீதிபதி தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். ஏற்றுக் கொள்ள முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். எனவே, தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்' என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai