சுடச்சுட

  

  தொன்மையான கலைகளை பாதுகாப்பது நமது கடமை: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு

  By DIN  |   Published on : 14th July 2019 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  BOOK

  நமது நாட்டின் தொன்மையான கலைகளை காப்பது அனைவரின் கடமை என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
   "ஸ்ரீரங்கம்- பழங்காலத்தை வருங்காலத்துக்காகப் பாதுகாப்பது' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்குத் தலைமை வகித்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது: காவிரிக் கரையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கநாத சுவாமி கோயில் இந்தியாவில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலை பல்லவர்கள், பாண்டியர்கள், சேர மன்னர்கள் பாதுகாத்து வந்தனர். பின்னர் வந்த விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்கர்கள் ஆட்சியின் போது, கோயில் புனரமைக்கப்பட்டது.
   தற்போது இந்தக் கோயில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை நியமித்த இந்திய கலாசாரம், பாரம்பரிய அறக்கட்டளை மற்றும் வேணுகோபாலசாமி அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்தக் கோயிலை புனரமைக்கும் பணிகளை மேற்கொண்டு, 16 மாதங்களுக்குள் முடித்திருப்பது பாராட்டுக்குரியது. நமது நாட்டின் சிற்பக்கலைகள், இசை, நடனம், கவிதைகள், நாடகங்கள், புராணங்கள், தத்துவங்கள், கணிதம் உள்ளிட்ட விலை மதிக்க முடியாத தொன்மையான கலைகளைக் காப்பது நமது கடமை என்றார்.
   இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சேவூர் ராமச்சந்திரன், பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி, ஸ்ரீரங்கநாத யாத்ரீக மகாதேசிக சுவாமிகள், ஸ்ரீ வானமாமலை ஜீயர் சுவாமிகள் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் வேணு சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai