சுடச்சுட

  

  பாமகவின் 31-ஆவது ஆண்டு விழாûவை கட்சியினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
   இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பாமக தொடங்கி ஜூலை 16-ஆம் தேதியுடன் 30 ஆண்டுகளை நிறைவு செய்து 31-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஒரு கட்சி எத்தனை முறை ஆட்சி செய்தது என்பதைவிட, மக்கள் நலனுக்காக எத்தனை திட்டங்களைச் செயல்படுத்தக் காரணமாக விளங்கியது என்பதுதான் மிகவும் முக்கியம். அந்த வகையில், கடந்த 30 ஆண்டுகளில் மக்கள் பிரச்னைகளுக்காக பாமக எத்தனையோ போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அரசியல் அழுத்தம் காரணமாகவும் சட்டப் போராட்டம் மூலமாகவும் தமிழகத்தில் 4,000-க்கும் கூடுதலான மதுக்கடைகளை மூட வைத்துள்ளோம்.
   தோல்வியிலிருந்து மீள்வோம்: மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் கூட்டணி அமைத்தோம், கடுமையாக உழைத்தோம். ஆனால், முடிவுகள் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் எதிராக அமைந்தன. இந்த நிலையில், அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதற்கடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் நமது அணி பிரம்மாண்டமான வெற்றிகளைக் குவிப்பதுதான் இலக்காக இருக்க வேண்டும்.
   அந்த இலக்கை நோக்கி வேகமாகவும் விவேகமாகவும் பயணிப்பதன் தொடக்கமாக அமையும் வகையில், பாமகவின் 31-ஆவது ஆண்டு விழாவை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இதுவரையில்லாத வகையில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தி கட்சியின் சாதனைகளை மக்களுக்கு விளக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai