ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம் கூட்டாட்சிக்கு எதிரானது: கே.பாலகிருஷ்ணன் 

ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம் என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம் என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
 மாநிலங்களுக்கு இடையில் உள்ள நதிநீர்ப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு தற்போதுள்ள தனி தீர்ப்பாயங்களை கலைத்து விட்டு ஒரே நதி நீர்த் தீர்ப்பாயம் அமைக்கும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
 உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையே கர்நாடக அரசு மதித்து நடக்க தவறி வரும் நிலையில், அனைத்து நதி நீர் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்ப்பாயம் என்ற மத்திய அரசின் முடிவு நதிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படாமல் நீண்ட காலம் இழுத்தடிக்கும் வாய்ப்பினைத் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாகவே தெரிகிறது.
 மத்திய பாஜக அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே குடும்ப அட்டை என்ற வகையில் ஒரே தீர்ப்பாயம் என்பது நமது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் விதமாக உள்ளது. இந்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com