பாஜகவைக் கண்டித்து குமரி அனந்தன் தலைமையில் காங்கிரஸார் போராட்டம் 

கர்நாடக அரசைக் கவிழ்ப்பதற்கான முயற்சியில் பாஜக ஈடுபடுவதாகக் கூறி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் தலைமையில் அக் கட்சியினர் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக அரசைக் கவிழ்ப்பதற்கான முயற்சியில் பாஜக ஈடுபடுவதாகக் கூறி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் தலைமையில் அக் கட்சியினர் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளமும், காங்கிரஸும் இணைந்து ஆட்சி புரிந்து வருகின்றன. இந்த ஆட்சியைக் கலைத்துவிட்டு, பாஜக ஆட்சியை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவதாகக் கூறி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காங்கிரஸ் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆர்ப்பாட்டத்துக்கு குமரி அனந்தன் தலைமை வகித்தார். தமிழக மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் சஞ்சய் தத் கூறியது: சிபிஐ மற்றும் வருமான வரித் துறையினரை வைத்து பாஜக ஆளாத மாநிலங்களின் ஆட்சியாளர்களை மத்திய அரசு மிரட்டி வருகிறது. கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடந்து வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை விலை கொடுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றார்.
 மாநிலப் பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி, மாவட்டத் தலைவர்கள் திரவியம், சிவராஜசேகரன் க.வீரபாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர். மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் காங்கிரஸ் சார்பில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com