சுடச்சுட

  

  புதுவையில் மருத்துவப் படிப்புக்கான அரசு இடஒதுக்கீடு தரவரிசை வெளியீடு

  By DIN  |   Published on : 16th July 2019 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  புதுவை மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான அரசு இடஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலை சென்டாக் நிர்வாகம் திங்கள்கிழமை வெளியிட்டது.
  புதுவை மாநிலத்தில் மருத்துவப் படிப்புக்கான தனியார் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான சென்டாக் தரவரிசைப் 
  பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அரசுக்கான இடஒதுக்கீடு தொடர்பான தரவரிசைப் பட்டியல் வெளியாவதற்கு முன்பே, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டதற்கு, அரசியல் கட்சிகள்,  பெற்றோர்கள், மாணவர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பல் மருத்துவம், ஆயுர்வேதம் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு அடிப்படையில், அரசு இடஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலை சென்டாக் நிர்வாகம் திங்கள்கிழமை வெளியிட்டது. நிர்வாகப் பிரிவில் தெலுங்கு, கிறிஸ்தவ சிறுபான்மையினர் ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலும் வெளியாகியுள்ளது. மேலும், விளையாட்டுத் துறை இடஒதுக்கீட்டில் நீட் மற்றும் நீட் அல்லாத படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபம் ஏதேனும் இருந்தால், 16 -ஆம் தேதி  மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.  சென்டாக் தரவரிசைப் பட்டியல் முழுமையாக வெளியாகி உள்ள நிலையில், இன்னும் சில நாள்களில் கலந்தாய்வு குறித்த தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai