மாணவர்கள் அரசுப் பள்ளிகளைத் தேடி வரும் நிலையை அரசு உருவாக்குகிறது

மாணவர்கள் அரசுப் பள்ளிகளைத் தேடிவரும் நிலையை தமிழக அரசு உருவாக்கி வருகிறது என்றார் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு.
மாணவர்கள் அரசுப் பள்ளிகளைத் தேடி வரும் நிலையை அரசு உருவாக்குகிறது


மாணவர்கள் அரசுப் பள்ளிகளைத் தேடிவரும் நிலையை தமிழக அரசு உருவாக்கி வருகிறது என்றார் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு.
கோவில்பட்டியில், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு கருத்து கேட்கப்பட்டுள்ளது. 69 சதவீத இடஒதுக்கீடு பாதிக்காத அளவில் அரசு நல்ல முடிவெடுக்கும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதுதான் அரசின் நிலைப்பாடு. ஆங்கிலவழிக் கல்வி கற்பதற்காக தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லும் நிலை இருப்பதை கருத்தில்கொண்டு, அரசு சார்பில் அங்கன்வாடி மையங்களில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும், தேர்ச்சி விகிதமும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. அரசுப் பள்ளிகளுக்கு எவ்வித ஆபத்தும் இல்லாமல், அதன் எண்ணிக்கை குறையாமல் அரசு பார்த்துக்கொள்ளும். தனியார் பள்ளிகளில் சேரும் நிலையை மாற்றி, அரசுப் பள்ளிகளைத் 
தேடி மாணவர்கள் வரும் நிலையை அரசு உருவாக்கி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்மா மருந்தகம் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. அம்மா மருந்தகத்தில் தனியார் மருந்தகத்தைக் காட்டிலும் 15 சதவீதம் விலை குறைவாக மருந்துகள் விற்கப்படுகின்றன. சில இடங்களில் நிர்வாகப் பிரச்னை காரணமாக இயங்காத அம்மா மருந்தகங்களை முறைப்படுத்தி இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com