ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் ஜூலை 20-ஆம் தேதிக்குள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்


ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் ஜூலை 20-ஆம் தேதிக்குள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இத்திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என சட்டப்பேரவையில் தமிழக அரசு வாய்மொழியாகக் கூறினாலும், அதிகாரப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கவில்லை. இதனால்,  ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஏற்கெனவே கச்சா எண்ணெய் எடுப்பதற்காக ஆய்வு செய்து,  கைவிட்ட இடங்களில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி வாங்கிவிட்டதாகத் தவறான தகவலை கூறி வருகிறது. ஆதிரெங்கம் உள்ளிட்ட சில கிராமங்களில் புதிதாக இடங்களை வாங்கியுள்ளது. மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காகக் கிணறுகளை வெட்ட,  ராட்சத இயந்திரங்களை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இறக்கி வருகிறது. தமிழகச் சட்டப்பேரவையில் இத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். ஆனால், இத்தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றாமல் இருப்பது, அத்திட்டத்துக்கு ஆதரவாக அரசு இருக்கிறதோ என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. எனவே, சட்டப்பேரவையில் ஜூலை 20-ம் தேதிக்குள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார் பாண்டியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com