சுடச்சுட

  

  உடல் உறுப்புகளை தானம் செய்ய முதல்வர், துணை முதல்வர் ஒப்புதல்

  By DIN  |   Published on : 17th July 2019 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  eps_ops


  உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஒப்புதல் அளித்திருப்பதாக பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
  சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா பேசும்போது, மு.க.ஸ்டாலினும், அவரது மனைவியும் உடல் உறுப்புகளை ஏற்கெனவே தானம் செய்துள்ளனர் என்றார்.
  அப்போது, அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குறுக்கிட்டு, முதல்வரும், துணை முதல்வரும் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர். உடல் உறுப்புகளைத் தானம் செய்வதற்கான படிவம் இங்கேயே (பேரவை வளாகத்தில்) உள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன் வரவேண்டும் என்றார்.
  பூங்கோதை (திமுக): இதன் மூலம் அதிமுகவுக்கு திமுகதான் முன்னோடி என்பது உறுதியாகிறது என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai