தமிழிலும் தபால் துறை தேர்வுகள்: தலைவர்கள் வரவேற்பு

ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் நடத்தப்பட்ட தபால் துறை போட்டித் தேர்வை ரத்து செய்து, தமிழிலும் தேர்வு நடைபெறும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழக அரசியல் தலைவர்கள்
தமிழிலும் தபால் துறை தேர்வுகள்: தலைவர்கள் வரவேற்பு


ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் நடத்தப்பட்ட தபால் துறை போட்டித் தேர்வை ரத்து செய்து, தமிழிலும் தேர்வு நடைபெறும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் : தபால் துறை போட்டித் தேர்வுகள் தமிழ் மொழியிலும் நடத்தப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்ற தமிழ் மொழியைப் புறந்தள்ளி ஒருதலைப்பட்சமாக ஹிந்தி மொழிக்கு மட்டும் தனி முக்கியத்துவம் கொடுக்கும் முயற்சிகளை மத்திய பாஜக அரசு இனிமேலாவது கைவிட வேண்டும். 
மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தெரிவித்த கடுமையான கண்டனங்களின் காரணமாகவே பாஜக அரசு, தபால் துறையில் பிராந்திய மொழிகளிலும் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஒட்டுமொத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் புறக்கணித்து விட்டு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டும் நடத்தப்பட்ட  தபால்துறை பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில மொழி மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை உணர்ந்து எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. 
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டும் நடத்தப்படும் தபால் துறை தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. அதை உடனடியாக கவனத்தில் கொண்டு, தமிழர்களின் உணர்வை மதித்து, தபால் தேர்வை ரத்து செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com