வளரிளம் பெண்களுக்கு அம்மா இயற்கை நலப் பெட்டகம்': பேரவையில் அறிவிப்பு

வளரிளம் பெண்களுக்கு ரத்த சோகை பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் ஊட்டச்சத்துப் பொருள்கள் அடங்கிய அம்மா இயற்கை நலப் பெட்டகம்'  இலவசமாக வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர்


வளரிளம் பெண்களுக்கு ரத்த சோகை பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் ஊட்டச்சத்துப் பொருள்கள் அடங்கிய அம்மா இயற்கை நலப் பெட்டகம்'  இலவசமாக வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அறிவித்தார்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்புகளின் விவரம்:
புற்றுநோய், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு நேரில் வர இயலாமல் வீடுகளிலேயே முடங்கியிருக்கும் நோயாளிகளுக்கு அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று சிகிச்சையளிக்கும் திட்டத்தை 287 வட்டாரங்களுக்கு விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
துôய்மையாகப் பராமரிக்கப்படும் அரசு மருத்துவமனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு, ஆண்டுதோறும் சிறந்த மருத்துவமனைகளுக்கு தூய்மை மற்றும் பசுமை விருதுகள் வழங்கப்படும்.
மருந்து உற்பத்திக்கான உரிமங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கான சுகாதாரச் சான்றுகள் இனி இணையவழியில் வழங்கப்படும்.
திருச்சி, சேலம், கோவையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மூன்றாம் பாலினத்தவருக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளன. வளரிளம் பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை பாதிப்பைத் தடுக்கும் நோக்கில் கறிவேப்பிலைப் பொடி,  முருங்கைக் கீரைப் பொடி, தேன் அடங்கிய அம்மா இயற்கை நலப் பெட்டகம்' ரூ.1.75 கோடி செலவில் வழங்கப்படும்.
அதேபோன்று 65 லட்சம் பெண்களுக்கு இரும்புச் சத்து, ஃபோலிக் சத்து மாத்திரைகளும், குடற்புழு நீக்க மாத்திரைகளும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com