வைகோ மீதான ஓராண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வைகோ மீதான ஓராண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசத் துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து வைகோ தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடியும் வரை சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை பிறப்பித்த பிறகு, இந்தியாவின் ஒருமைப்பாடு பாதிக்காத வகையில் சிந்தித்து பேசுமாறு வைகோவுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசினார். இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரணை செய்தது. இதில் வைகோவுக்கு, ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், வைகோ தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவில், "தேசத் துரோக சட்டப்பிரிவு 124(ஏ)-ன் விளக்கத்தை கீழமை நீதிமன்ற நீதிபதி தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். ஏற்றுக் கொள்ள முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். எனவே, தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்' என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com