அத்திவரதர் பெருவிழா: நெரிசலில் சிக்கி 5 பேர் பலி

அத்திவரதர் பெருவிழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி வியாழக்கிழமை 5 பேர் பலியாகினர்.
மாரடைப்பு ஏற்பட்ட நடராஜனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினர்.
மாரடைப்பு ஏற்பட்ட நடராஜனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினர்.

அத்திவரதர் பெருவிழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி வியாழக்கிழமை 5 பேர் பலியாகினர்.
அத்திவரதரை தரிசனம் செய்ய வியாழக்கிழமை காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் மாடவீதிகளில் நிரம்பி வழிந்தது. காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வரிசையில் வந்த பக்தர்களுக்கு வாந்தி, தலை சுற்றல், மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.
இதையடுத்து, ஆங்காங்கே இருந்த மருத்துவ முகாம்களில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். நேரம் செல்லச் செல்ல வெயிலின் தாக்கம் அதிகமானதால் சிலர் நீர்ச்சத்து குறைபாட்டால் அவதிக்குள்ளாகினர். 
நெரிசலில் சிக்கி 5 பேர் பலி: அத்திவரதரை தரிசிக்க வந்த சென்னை ஆவடியைச் சேர்ந்த நாராயணி (40), திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நடராசன் (50) , ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த கெங்கலட்சுமி (50), ராஜமுந்திரியைச் சேர்ந்த சக்தி அஜய்குமார் (22), சேலம் அயோத்தியாபட்டணம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (47) ஆகிய 4 பேர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.  இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com