செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 2 மாவட்டங்களை தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது: ஜிகே. வாசன்

செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 2 மாவட்டங்களை தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தமாகா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார். 
செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 2 மாவட்டங்களை தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது: ஜிகே. வாசன்

செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 2 மாவட்டங்களை தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தமாகா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழக அரசு நெல்லை மாவட்டத்திலிருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டை பிரித்து தனி மாவட்டமாகவும் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று நிர்வாக வசதிக்காகவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும், பொருளாதாரத்தில் மேம்படுவதற்காகவும் தனி மாவட்டமாக பிரித்திருப்பது அம்மாவட்ட மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்திருக்கிறது.

எனவே தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை உதயமாக்கிய தமிழக அரசுக்கு த.மா.கா சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் சோழப் பேரரசில் தலைநகராக விளங்கிய கும்பகோணம் தற்போது தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. எனவே கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி வாழ் மக்களின் கோரிக்கையான கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவும் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட வேலூர் மாவட்டத்தையும் பிரித்து புதிய மாவட்டங்களாக அறிவிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று த.மா.கா. சார்பில் கோரிக்கை வைக்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com