சுடச்சுட

  

  டிக் டாக் செயலியை தடை செய்தால் நல்லது: முதல்வர் பழனிசாமி

  By DIN  |   Published on : 20th July 2019 11:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tiktok


  டிக் டாக் செயலியை தடை செய்தால் நல்லது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கோவை விமான நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

  தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

  "குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து கடத்துவது போல், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து திமுக மக்களை ஏமாற்றியது. தற்போது அவர்கள் மத்தியிலும் ஆட்சியில் இல்லை, மாநிலத்திலும் ஆட்சியில் இல்லை. அவர்கள் எப்படி வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள்?" என்றார். 

  தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர்கள் கருத்து தெரிவிப்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், 

  "ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும்" என்றார். 

  என்ஐஏ சட்டத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, 

  "மக்களை காப்பதற்குத்தான் சட்டம். மக்களை பாதுகாக்கும் எந்தவொரு சட்டத்துக்கும் ஜெயலலிதா அரசு ஆதரவு தெரிவிக்கும்" என்றார். 

  அத்திரவரதர் கோயில் குறித்து பதிலளித்த முதல்வர், 

  "சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. இன்று மாலை கூட 5 மணி அளவில் அந்தந்த துறை அமைச்சர்கள், தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர், துறை செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவர்கள் கூறிய கருத்தின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஏற்பாடுகளை தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோர் காஞ்சிபுரம் சென்று நேரில் பார்வையிடுவார்கள்.

  பக்தர்களுக்கு பேருந்து வசதிகள், மருத்துவக் குழு வசதிகள், குடிநீர் வசதிகள், நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வெள்ளம் எதிர்பாராத விதமாக வருகின்றனர். எனினும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது" என்றார். 

  டிக் டாக் செயலி தடை செய்வது குறித்து கேட்டதற்கு, 

  "தடை செய்தால் நல்லது" என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai