10, 11, 12-ஆம்  வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 2019 -20-ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு,  பிளஸ் 1,  பிளஸ் 2 ஆகிய வகுப்புக்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை  பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
10, 11, 12-ஆம்  வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 2019 -20-ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புக்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை  பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு (2020)  மார்ச் 17-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9-ஆம் தேதி நிறைவடைகிறது. தேர்வு முடிவுகள் மே 4-ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.

பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி, மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் மே 14-ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.

பிளஸ் 2  வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி, மார்ச் 24-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.

கடந்த 3 ஆண்டுகளாகவே பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக பள்ளி கல்வித் துறை முன்கூட்டியே வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் தேர்வுகளை மன அழுத்தமின்றி எதிர்கொள்ளவும், ஆசிரியர்கள் மாணவர்களைத் தேர்வுக்கு தயார் செய்வதற்கு ஏதுவாகவுமே தேர்வு அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பத்தாம்  வகுப்பு தேர்வு அட்டவணை

மார்ச் 17    செவ்வாய்    தமிழ் முதல் தாள்
மார்ச் 19    வியாழன்    தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 21    சனி    விருப்ப மொழிப்பாடம்
மார்ச் 27    வெள்ளி    ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 30    திங்கள்    ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 2    வியாழன்    கணிதம்
ஏப்ரல் 7    செவ்வாய்    அறிவியல்
ஏப்ரல் 9    வியாழன்    சமூக அறிவியல்

பிளஸ் 1 வகுப்பு அட்டவணை

மார்ச் 4    புதன்    மொழிப்பாடம்
மார்ச் 6    வெள்ளி     ஆங்கிலம்
மார்ச் 11    புதன்    கணிதம்,  விலங்கியல்,  வணிகவியல்,  நுண்ணுயிரியல், வேளாண் அறிவியல்.                  
மார்ச் 13    வெள்ளி    தொடர்பியல் ஆங்கிலம்,   கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல்,சிறப்புத் தமிழ்,   மனையியல்,  அரசியல் அறிவியல், புள்ளியியல்.
மார்ச் 18    புதன்    இயற்பியல்,  பொருளியல்,    கணினி தொழில்நுட்பம்      
மார்ச் 23    திங்கள்    உயிரியல்,  தாவரவியல்,  வரலாறு,              வணிக கணிதம்
மார்ச் 26    வியாழன்    வேதியியல்,  கணக்குப் பதிவியல்,              புவியியல்

பிளஸ் 2 வகுப்பு தேர்வு அட்டவணை

மார்ச் 2    திங்கள்    மொழிப்பாடம்
மார்ச் 5    வியாழன்    ஆங்கிலம்
மார்ச் 9    திங்கள்    கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், வேளாண் அறிவியல்
மார்ச் 12  வியாழன்    தொடர்பியல் ஆங்கிலம், இந்திய வரலாறு, கணினி அறிவியல்,  கணினி பயன்பாட்டியல்,   உயிரிவேதியியல், சிறப்புத் தமிழ்,         மனை அறிவியல், அரசியல் அறிவியல்,  புள்ளியியல்
மார்ச் 16    திங்கள்    இயற்பியல், பொருளியல்,   கணினி தொழில்நுட்பம்
மார்ச் 20    வெள்ளி    உயிரியல், தாவரவியல், வரலாறு,  வணிக கணிதம், 
புள்ளியியல்
மார்ச் 24    செவ்வாய்    வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com